Friday 1 June 2012


குஞ்சுப்பிள்ளையும்
குட்டிப்பூனையும்

என்னிடம் குஞ்சுப்பிள்ளை அடிக்கடி வருவாள்.

’’மாமா எனக்கு முட்டாய் மருந்து கொடு’’

பிள்ளைகள் தனக்கு எது வேண்டுமோ அதைக்கேட்க எப்போதும் தயங்கியதில்லை.

’’ உனக்கு என்ன பண்ணுது குஞ்சுபிள்ள’’

’’ தலவலி,  காச்சலு, பல்லுவலி, காலுவலி  ’’

எல்லாநோய்களும் தனக்கு இருப்பதாய் சொல்வாள். ஒரு கள்ளச்சிரிப்பு முகம் எங்கும் விரவிக்கிடக்கும்.

இவளுக்கு கொஞ்சம் ’’ இனிப்பு ’’வேண்டும். அதுவும் இலவசமாய் கிடைக்கும் போது ஒரு பொய் சொன்னால் பரவாயில்லை. பிள்ளைகள் பெரியவர்களிடம் இருந்து முதலில் பொய் சொல்ல கற்றுக்கொள்கிறார்கள்.

நான் கொஞ்சம் சிறப்பு மருந்தை கொடுத்து அனுப்புவேன். பதுமை மாதிரி திரும்புவாள்.

ஒரு நாள் ஒரு குட்டிப்பூனையோடு வந்தாள்

Saturday 26 May 2012

\

டெங்கு காய்ச்சல்

Dengue fever









தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சல் பல மாவட்டங்களை தாண்டி பரவி வருகிறது, இதோ அதோ என்று சுகாதாரத்துறை பணிகளை முடுக்கி விடுகிறது . நல்ல தண்ணீரில் வசிக்கும் கொசுக்களே இதில் முக்கிய அங்கம் வகிக்கிறது .

சுகாதாரம் முக்கியம். இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத்தின் லட்சணம் நமக்கு நன்கு தெரிந்தது தான்.

அதீதமான பயம் தெளிவில்லாமை. குழப்பம் என பல பிரச்சனைகளும் இதனோடு இணைந்து கொள்கிறது.

இந்த நேரத்தில் தமிழக ஹோமியேபதியர்களின் பங்களிப்பு மிக தேவையானது.

குறிகளை தொகுத்துக்கொள்வதும் தொகுத்தவைகளை பகிர்ந்து கொள்வதும் தேவையானது.








முதல் கட்டமாக.


Dr w.boericke, m d அவர்களின் repertory page no 924 ல் அவர் குறிப்பிடும் மருந்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.



Acon;
Ars;
Bell
Bry;
Canth;
Cinch;
Eup-perf;
Gels;
Ipec;
Nux-v;
Rhus-t;
Rhus-v











இது தவிர புதிதாய் வரும் குறிகளை தொகுத்து நண்பர்களோடு விவாதித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.bhairavihomoeopathy



டெங்கு காய்ச்சலில் பயன் படும் மருந்துகள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில் அதன் குறிகளை தொகுத்து கொள்வது நோயாளிகளை புரிந்து கொள்ளவும் குறிகளை பரிசீலிக்கவும் உதவியாய் இருக்கும்,

இரண்டு விதமான நிலைகள் இப்போது தொகுக்கப்பட்டு இருக்கிறது


ஒன்று

Fever with headache
Exertion fever during
Joints pain
Muscular pain fever during
Swelling glands
Rash= urticaria fever during

இரண்டு

Bleeding gums
Severe eye pain behind the eye
Red balm & sole
Bone pain as if broken fever with rash
Heamorrhage in body
Red purple colour under the skin
Bloody nose during fever
 Black stool
Easily bruised feeling

இவைகளை விடவும் துயரரின் தனித்தன்மையே தீர்மானமானது.
இன்றைய தமிழ் சூழலில் நலிவுற்ற மக்களை காப்பதும், மேதை ஹானிமன் அவர்களின்  கனவை எதிர்பார்ப்பை தமிழ் மண்ணில் நிகழச்செய்வதும் நமது கடமையாகும், 

04-06-12

Saturday 19 May 2012


சர்வதேச சமுகம்.


உன் கள்ளத்தனமான மெளனம்

புதைமேட்டில் படிக்கப்படும் அனுதாப உரைகள்

நடுநிலையை தூக்கி நிற்கும்

மேதைமைதாங்கிய உன் கண்டனங்கள்

எல்லைகளை காட்டி கடமையை கைவிட்ட உன் நாசுக்கு,

அறத்தின் மதிப்பாறியாத உன் இதயம்




எனது இரத்தம்

உங்களின் அறிக்கையானது

எனது இரத்தம்

குளிருட்டப்பட்ட அறைகளில் விவாதமானது

எனது இரத்தம்

உன் தத்துவங்களை நனைத்த பின்னும்

எனது இரத்தம்

உன் கண்களை குருடாக்கிய பின்னும்

எனது இரத்தம்

ஏதுமற்ற எம் வாழ்வை சுட்டியபின்னும்

எனது இரத்தம்

ஏதிலியாய் கரைந்த பின்னும்

மெளனமாய் நாவுகளை உள் நோக்கி திருப்பினாய்


மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த உன் பண்பாட்டின் போது

வளமான நாகரீகத்தை கட்டமைத்தது என் மூத்தகுடிகள்

நீர் தடுத்தோம்

வயல் கண்டோம்

வானியல் கண்டோம்

வாழ்வின் வளமனைத்தும் கற்றுத்தெளிந்தோம்.

உம் நீண்டமெளனம்

எம் பிணக்குவியலுக்குள்ளும் புகுந்தது

அறிக்கைகளுக்காக மட்டும் திறந்தது உம் வாய்

எல்லாம் முடிந்த பின்னும் நாகரீக வாழ்க்கைக்காக
காத்திரு

நல்ல நல்ல வார்த்தைகளை தேர்வு செய்து கண்டணம் செய்

சுட்டெரிக்கும் அக்கினியை வயிற்றில் தாங்கி

உம் முகத்தில் உமிழ்ந்து சொல்கிறேன்

என் பாட்டன் முப்பாட்டனின் வார்த்தைகளை


யாதும் ஊரே

யாவரும் கேளீர்
 



 


Tuesday 24 April 2012


10 வருட போராட்டம்.







Dr கைலாசம் ஒரு sms அனுப்பி இருந்தார். அதில் முதல் வரியே ’’ ஆத்தா  நா பாசாயிட்டேன் ’’ என்பதுதான். பழைய தமிழ் சினிமாக்களில் பரிட்சையில் பாசான கதாநாயகனோ , கதாநாயகியோ இப்படித்தான் கூவிக்கொண்டே ஒடி வருவார்கள்.



இந்த கூவல் சாதரணமானது அல்ல, 10 வருட தீவிரம் முழுமையடைந்ததன் பின்னணி வலி நிறைந்த இந்த பாதை முழுமையும், எதிர் கொண்ட மனிதர்களையும், உதவிக்கு நீண்ட கரங்களையும் கீழுதடு கடித்து நக்கலடித்த முகங்களையும், மறந்து விட முடியாது.













தமிழ்நாடு ஹோமியோபதி காலேஜில் முதலாமாண்டு வரை படித்து ,தேர்வின் போது +2 தேவை என அறிவித்தது நிர்வாகம்[இவர் அந்தகால பியூசி ] பின்னர் வெளியேறி national institute of open school ல் படித்து பின்னர் விநாயகா மிஷனில்  ஹோமியோபதி படித்து வெளியே வந்திருப்பது எளிமையான விசயம் அல்ல.

படிப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல ஆனால்  சமுகம் உருவாக்கி வைத்திருக்கும்  தடைகள் ஏராளம். அதை தாண்டுவதும் , தாண்டி ஜெயித்திருப்பதும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம்       

   dr கைலாசம் வீட்டுக்கதவுகள் தீவிரமான ஹோமியோபதியர்காகவும், ஆன்மிக வாதிகளுககாவும் எப்போதும் திறந்திருக்கிறது.

அங்கே நடக்கும் விவாத பரிவர்த்தனைகளில் எதிர்பார்த்த விசயங்களை தாண்டி மாணிக்கங்களையும், முத்துக்களையும் பொருக்கிக்கொள்ள முடியும்.


















ஒரு முறை அவர் அப்பாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்

. ’’ இவர் கோவிந்து , என்ன மாதிரியே இப்பத்தான் +2 படிக்கிறார்.’’

அப்பா ஆழமான ஒரு பார்வை பார்த்தார். லேசான சிரிப்பு சுழித்தோடி நின்றது உதட்டில்

உன்னோட இருக்கிற ஆட்கள் உன்ன மாதிரிதான? என்பதான அர்த்தம் எனக்குள் ஓடியது.

அப்போது அவர் மிக அழகான தேர் ஒன்றை செய்து கொண்டிருந்தார். இன்னும் அந்த தேரை பார்க்கும் போதெல்லாம், அந்த சிரிப்பை மறக்க முடிவதில்லை.

இந்த தீவிர செயல்பாட்டுக்குப் பின்னால் அவரின் மொத்த குடும்பமும் பங்காற்றி இருக்கிறது.

விருதுநகரா , மதுரையா , பெங்களூரா , சேலமா , எல்லா இடங்களுக்கும் குடும்பம் அவரோடு பயணப்பட்டது. தொழிற்சங்க வேலையாக இருக்கட்டும், அல்லது ஹோமியோபதியர்களின் விவாதமோ , ஆன்மீகத்தின் சத்சங்கமோ , எல்லா நிலைகளிலும் குடும்பம் துணைநின்றது.




உண்மையில் எதை இந்த உலகம் கேட்கிறதோ , அதை செய்து முடித்து விட்டார்கள்,
அதை தாண்டி இந்த மக்கள் கூட்டம் எப்படி பயணடையபோகிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் 

Tuesday 17 April 2012


துவரம் பருப்பு,
கடலை பருப்பு,
அன்னாஹசாரே...................................








எங்கள்  கல்லூரியின் முதலாமாண்டு தேர்வுகள் முடிந்த பின் சக மாணவர்களுக்கு  என் வீட்டில் ஒரு எளிய விருந்து கொடுத்தேன் . எல்லோரும் வீடு போய் சேரும் முன் இயல்பாய் கலந்து பேசுவதற்கு வாய்ப்பாய் அமைந்தது.













அப்போது விளையாட்டாய் ஒரு போட்டி வைத்தேன். கடலை பருப்பு டப்பாவையும், துவரம் பருப்பு டப்பாவையும், கையில் கொடுத்து  எது து.பருப்பு எது  க.பருப்பு கண்டுபிடியுங்கள் என்று சொன்னேன்.

பெரும் பாலான ஆம்பிளை பசங்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.  பெண்பிள்ளைகள் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள் . அது மட்டுமல்ல கண்டு கொள்ள முடியாமைக்காக பெருமிதமும் அடைந்தார்கள்.

’’எங்க வீட்ல நாந்தான் செல்லம் ’’

’’நா சமையல் கட்டுப்பக்கமே போனது இல்ல ’’

’’எங்க அப்பா சோறு உட்டினாத்தான் நான் சாப்பிடுவேன்.’’

’’நான் நல்லா வெந்நீர் போடுவேனே ’’

இது போன்ற கருத்து பிழிவுகள் வந்து விழுந்தன,

ஒன்பதாம் வகுப்பு தொடக்கம் பனிரெண்டாம் வகுப்பு வரை பிள்ளைகளை மார்க்குகளை மேயும் மாடுகள் மாதிரி வளர்க்கிறோம்.

உலகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது இப்போதைய நாகரீகம், படிக்கும் பிள்ளைகள் சமுகம் பற்றியோ. சக மனிதனைப்பற்றியோ சிந்திப்பது இல்லை. 

தனது ambition பற்றி மட்டுமே கவலை படுகிறார்கள்.  பாடம் தவிர்த்து மற்ற விசயங்களை படிப்பதே இல்லை.  --- இந்தி எதிர்ப்பில் துள்ளிக்குதித்த தமிழகம் எங்கே போனது ?

என் சக தோழியும் மாணவியுமான செல்வி s அவர்களோடு தொலைபேசியில் பேசும் போது அன்னா ஹாசாரே பற்றி கேட்டேன்,   அவள் திருப்பி கேட்கிறாள்.’’அப்பிடினா என்ன சார்

’’ . நான் அதிர்ந்துபோனேன்.

’’ஏம்புள்ள உண்மையிலேயே உனக்கு தெரியாதா ’’

’’ சத்தீமா தெரியாது சார் ’’

நான்  அழுவாதா ?  சிரிப்பதா ?

’’ சரி ஒரு வாரம் டைம் தர்ரேன் அதுக்குள்ள அன்ன ஹசாரே அப்பிடீன்னா என்னனு கண்டுபிடிக்க வேனும் சரியா ? . இது உனக்கு ஒரு அசைன்மெண்ட் ’’ என்றேன்.

ஒரு வாரம், பத்துநாள் ஆனது. ஒரு நாள் அவளை இடை மறித்துக்கேட்டேன்.

’’கண்டுபிடிச்சியா !’’

அவள் கமுக்கமாக சிரித்துக்கொண்டே சொன்னாள்’’ இல்ல சார் ’’

கடைசி வரைக்கும் அவள் கண்டுபிடிக்கவே இல்லை.
அதற்காக அவள் வருந்தவும் இல்லை.                                                                                     

இவளுக்கு நேர் எதிர், செல்வி b3 நிறைய படிப்பாள். அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்வாள். பத்திரிக்கை நிருபர் ஆக வேண்டும் , புகைபடம் எடுக்க வேண்டும் என்று ஆவலாய் இருப்பாள். உதவி செய்ய நீளும் கரங்கள் இவளுடையது.
இவ்வருட தேர்வு முடிவில் செல்வி s வெற்றி பெற்று விட்டாள். செல்வி b3யும், இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தோல்வி அடைந்து விட்டோம்.
வாழ்வு எழுதிச் செல்லும்  புதிர் விளையாட்டை களைப்படையாமல் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.


Saturday 7 April 2012


புதிய ஹோமியோபதி புத்தகங்கள்
Dr v s சுப்பிரமணி அவர்கள் மொழிபெயர்த்த , பதிப்பித்த , நான்கு ஹோமியோபதி புத்தகங்கள் இந்த மாதத்தில் வெளிவந்து விட்டது.  




















விஜயா பதிப்பகம் வெளியிட்ட இந்த நான்கு புத்தகங்களும் தமிழில் பதிப்பிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் கழிந்து விட்டது.

மறு பதிப்பு இப்போதுதான் வெளி வருகிறது.

கிடைப்பதற்கு அரிய இப்புத்தகங்களை தமிழ் மக்கள் எவ்விதம் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதை நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழர்களுக்கு என்று ஒரு பொதுப்புத்தி உண்டு.

 



















இங்கே மோர் விற்க வேண்டுமானால் ‘’மோர் மோரெ’’ என்று கூவவேண்டும், ஆனால் கள் விற்க வேண்டுமானால் , சத்தம் இல்லாமல் விற்று விடலாம்.

 இந்த பொதுபுத்தியை தாண்டி இந்த புத்தகங்கள் விற்கவேண்டும் என்பதே என் எதிர் பார்ப்பு.

Saturday 31 March 2012


தொந்தி:                       
இந்த நூற்றாண்டின் பிரச்சனை.

19ம் அல்லது 20 ம் நூற்றாண்டு முழுமையும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணியாய் அமைந்தது  பசி;


வரலாறு நெடுகிலும் பசியே தீர்மாணமாய் அமைந்தது. கலை, இலக்கியம், அரசியல், தத்துவம், என எல்லா திசைகளிலும் பசி சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.     
                    ’’’கல்லைத்தான் மண்னைத்தான் காய்ச்சித்தான் , குடிக்கத்தான் கற்பித்தானா’’’ என்று புலவர் ராமச்சந்திர கவிராயர் பாடல் கூறுகிறது

உலகின் எல்லா துன்பங்களுக்கும். அரசியல் கொலைகளுக்கும் , போர்களுக்கும்  அடிநாதமாய் அமைந்தது பசியே ஆகும்

பசி என்னும் அரக்கன் நாளையும் வருவானே என்று புலம்புகிறது திருக்குறளின் ஒரு குறள்

உலகின் மெச்சத்தகுந்த எல்லா கவிகளும் பசி பஞ்சத்தால், அடிபட்டவர்களே. அவன் பாடியது காதலோ. இயற்கையோ. அரசியலோ எதுவாயினும் அதன் அடி நாதமாய் இருந்தது பசி

 கடந்த நூற்றாண்டின்  பெரும்பாலான இலக்கியங்கள்                                                 ’’’’ எதுக்கு இந்த ஈனப்பொழப்பு எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்கு தானே’’’ என்று பேசாமல் இல்லை

விதவிதமான ஆகரங்கள் பதினாறு வகை காய்கறிகள் சாப்பிடும் வகைகள் என ஆசைகளும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்தன.

எதுவும் கிடைக்காமல் வெந்ததை தின்று விதி வந்தால் செத்த பாரம்பரைகள் 
இங்கு உண்டு

கோரை கிழங்குகளையும். கத்தாழை கிழங்குகளையும் தோண்டித்தின்றவர்கள் ஒரு புறமும் ’’’பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’’  என்று இன்னொறு கூட்டமும் இருந்து கொண்டேதான் இருந்தது

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்களும் உலகையே வெற்றி பெற துடித்தவர்களும் கடைசியில் வெறும் கையை நீட்டிப்போனதும் இங்கேதான்.

 ஆனால் இந்த நூற்றாண்டு தொடக்கமே உண்ணுகிற மோகம் வெறி கொண்டது போல் அலைகிறது 

குறிப்பாக 1980 க்கும் பின் வந்த படிப்பாளி வர்க்கம் , அதன் பின் வந்த  IT கூட்டம் வாழ்க்கையை இரண்டு விதமாக மட்டும் பார்க்கிறார்கள்.

ஒன்று வெற்றி, அது எவ்விதமேனும் அடைந்தே ஆக வேனும் .
இன்னென்று அனுபவித்தல், கட்டிலடங்காத நுகர்வு வெறி.

இவைகளை அடைவதற்கு எவ்வித விலையையும் கொடுக்க துடிக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் தொந்தி,  இந்த நூற்றாண்டின் பெரும் பிரச்சனையாய் உருவெடுக்கிறது

தொந்திக்கான காரணங்கள்;
கொழுப்பு

அதீத உணவு, மசாலாக்கள் மாமிசம் உணவு வகைகள்.

முறைகெட்ட தூக்கம்.

தொலைக்காட்சி

இவைகள் முக்கியமானவை , கூடுதலாக சிலருக்கு அதிக துக்கமும் 
காரணமாக இருக்கிறது.

இலக்கு நோக்கி ஒடிக்கொண்டே இருக்கும் வாழ்கை முறை. ஒய்வு இல்லா மனநிலை.

சத்குரு ஜகி வாசுதேவ் ஒரு முறை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
முன்பு காடுகளில் மனிதன் வாழும் போது மரங்களில் கிடைத்ததை உண்டு வந்தான். பின்னர் விவசாயம் செய்தான். வருடத்தில் முன்று மாதவேலை பின்னர் ஒய்வு. இப்போது வருடம் முழுதும் வேலை செய்கிறான் ;

ஆனாலும் பய புள்ளை சும்மா இருக்க முடியுதா? ஒன்று உடம்பு வேலை செய்கிறது அல்லது மனம் வேலை செய்கிறது. ஒய்வு என்பது சாகும் போது மட்டும் தானா ?

சிகரங்களை தொடுவதற்கான இந்த ஓட்டத்தில் கிடைத்ததை எல்லாம் தின்று தீர்க்கிறான். நுகர்வு வெறி  எல்லாத்தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதன் பக்க விளைவுதான் தொந்தி
.
விளைவுகள்

அதிக எடை. நீரிழிவு பிரச்சனை.

மூட்டு வலி

நடக்கும் போது மூச்சு வாங்குதல்

பசியின்மை [சிரிக்க வேண்டாம்]

இருதயக் கோளாறு

டவுன் பஸ்சிலோ அல்லது நீண்ட தூரபேருந்துகளில்  இடம் பிடிக்க ஏற்படும் சிரமங்கள். பக்கத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒல்லி பிச்சான்கள் விடும் சாபங்கள் எழு தலைமுறைகளை பிடித்து ஆட்டும்.

’’எந்த கடையில அரிசி வாங்குறா ’’  கிண்டல்கள். கேலிகள்.
நாம் வாழும் இந்த தலைமுறை மிகுந்த பலவீனமான உடல் நிலையில் இருக்கிறது.

என் நண்பர் பாலமுருகன்  சொன்னார். அவருக்கு தெரிந்த ஒரு வீட்டில் இட்லிக்கு மாவு வாங்கி அளவாய் மூன்று அல்லது நான்கு இட்லிகளை சுடுவார்களாம். ஒரு நாள் முக்கால் படி அரிசி போட்டு கிரைண்டரில் அரைத்தார்களாம்.  அடுத்தநாள் அந்த வீட்டு அம்மாவுக்கு காய்ச்சல் வந்து விட்டதாம். என்ன மாதிரி உடம்பை ஒருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.!!!!

ஏதாவது ஒரு யோகா அமைப்பு ‘’ஒரே வாரத்தில் உங்களை சம்மணமிட்டு அமர வைப்போம்’’ என்ற விளம்பரம் வெளியிடுமோ என்று எனக்கு ஒரு பயம் இருக்கிறது.

தொந்தி குறைய வழிகள்.


நடை பயிற்சி

உணவு கட்டுப்பாடு

யோகா

இவை தவிர வேறு மார்க்கம் இல்லை.