Saturday 31 March 2012


தொந்தி:                       
இந்த நூற்றாண்டின் பிரச்சனை.

19ம் அல்லது 20 ம் நூற்றாண்டு முழுமையும் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணியாய் அமைந்தது  பசி;


வரலாறு நெடுகிலும் பசியே தீர்மாணமாய் அமைந்தது. கலை, இலக்கியம், அரசியல், தத்துவம், என எல்லா திசைகளிலும் பசி சம்மணமிட்டு அமர்ந்திருந்தது.     
                    ’’’கல்லைத்தான் மண்னைத்தான் காய்ச்சித்தான் , குடிக்கத்தான் கற்பித்தானா’’’ என்று புலவர் ராமச்சந்திர கவிராயர் பாடல் கூறுகிறது

உலகின் எல்லா துன்பங்களுக்கும். அரசியல் கொலைகளுக்கும் , போர்களுக்கும்  அடிநாதமாய் அமைந்தது பசியே ஆகும்

பசி என்னும் அரக்கன் நாளையும் வருவானே என்று புலம்புகிறது திருக்குறளின் ஒரு குறள்

உலகின் மெச்சத்தகுந்த எல்லா கவிகளும் பசி பஞ்சத்தால், அடிபட்டவர்களே. அவன் பாடியது காதலோ. இயற்கையோ. அரசியலோ எதுவாயினும் அதன் அடி நாதமாய் இருந்தது பசி

 கடந்த நூற்றாண்டின்  பெரும்பாலான இலக்கியங்கள்                                                 ’’’’ எதுக்கு இந்த ஈனப்பொழப்பு எல்லாம் இந்த ஒரு சாண் வயித்துக்கு தானே’’’ என்று பேசாமல் இல்லை

விதவிதமான ஆகரங்கள் பதினாறு வகை காய்கறிகள் சாப்பிடும் வகைகள் என ஆசைகளும் கண்டுபிடிப்புகளும் வளர்ந்தன.

எதுவும் கிடைக்காமல் வெந்ததை தின்று விதி வந்தால் செத்த பாரம்பரைகள் 
இங்கு உண்டு

கோரை கிழங்குகளையும். கத்தாழை கிழங்குகளையும் தோண்டித்தின்றவர்கள் ஒரு புறமும் ’’’பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’’  என்று இன்னொறு கூட்டமும் இருந்து கொண்டேதான் இருந்தது

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர்களும் உலகையே வெற்றி பெற துடித்தவர்களும் கடைசியில் வெறும் கையை நீட்டிப்போனதும் இங்கேதான்.

 ஆனால் இந்த நூற்றாண்டு தொடக்கமே உண்ணுகிற மோகம் வெறி கொண்டது போல் அலைகிறது 

குறிப்பாக 1980 க்கும் பின் வந்த படிப்பாளி வர்க்கம் , அதன் பின் வந்த  IT கூட்டம் வாழ்க்கையை இரண்டு விதமாக மட்டும் பார்க்கிறார்கள்.

ஒன்று வெற்றி, அது எவ்விதமேனும் அடைந்தே ஆக வேனும் .
இன்னென்று அனுபவித்தல், கட்டிலடங்காத நுகர்வு வெறி.

இவைகளை அடைவதற்கு எவ்வித விலையையும் கொடுக்க துடிக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் தொந்தி,  இந்த நூற்றாண்டின் பெரும் பிரச்சனையாய் உருவெடுக்கிறது

தொந்திக்கான காரணங்கள்;
கொழுப்பு

அதீத உணவு, மசாலாக்கள் மாமிசம் உணவு வகைகள்.

முறைகெட்ட தூக்கம்.

தொலைக்காட்சி

இவைகள் முக்கியமானவை , கூடுதலாக சிலருக்கு அதிக துக்கமும் 
காரணமாக இருக்கிறது.

இலக்கு நோக்கி ஒடிக்கொண்டே இருக்கும் வாழ்கை முறை. ஒய்வு இல்லா மனநிலை.

சத்குரு ஜகி வாசுதேவ் ஒரு முறை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
முன்பு காடுகளில் மனிதன் வாழும் போது மரங்களில் கிடைத்ததை உண்டு வந்தான். பின்னர் விவசாயம் செய்தான். வருடத்தில் முன்று மாதவேலை பின்னர் ஒய்வு. இப்போது வருடம் முழுதும் வேலை செய்கிறான் ;

ஆனாலும் பய புள்ளை சும்மா இருக்க முடியுதா? ஒன்று உடம்பு வேலை செய்கிறது அல்லது மனம் வேலை செய்கிறது. ஒய்வு என்பது சாகும் போது மட்டும் தானா ?

சிகரங்களை தொடுவதற்கான இந்த ஓட்டத்தில் கிடைத்ததை எல்லாம் தின்று தீர்க்கிறான். நுகர்வு வெறி  எல்லாத்தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதன் பக்க விளைவுதான் தொந்தி
.
விளைவுகள்

அதிக எடை. நீரிழிவு பிரச்சனை.

மூட்டு வலி

நடக்கும் போது மூச்சு வாங்குதல்

பசியின்மை [சிரிக்க வேண்டாம்]

இருதயக் கோளாறு

டவுன் பஸ்சிலோ அல்லது நீண்ட தூரபேருந்துகளில்  இடம் பிடிக்க ஏற்படும் சிரமங்கள். பக்கத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் ஒல்லி பிச்சான்கள் விடும் சாபங்கள் எழு தலைமுறைகளை பிடித்து ஆட்டும்.

’’எந்த கடையில அரிசி வாங்குறா ’’  கிண்டல்கள். கேலிகள்.
நாம் வாழும் இந்த தலைமுறை மிகுந்த பலவீனமான உடல் நிலையில் இருக்கிறது.

என் நண்பர் பாலமுருகன்  சொன்னார். அவருக்கு தெரிந்த ஒரு வீட்டில் இட்லிக்கு மாவு வாங்கி அளவாய் மூன்று அல்லது நான்கு இட்லிகளை சுடுவார்களாம். ஒரு நாள் முக்கால் படி அரிசி போட்டு கிரைண்டரில் அரைத்தார்களாம்.  அடுத்தநாள் அந்த வீட்டு அம்மாவுக்கு காய்ச்சல் வந்து விட்டதாம். என்ன மாதிரி உடம்பை ஒருவாக்கி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.!!!!

ஏதாவது ஒரு யோகா அமைப்பு ‘’ஒரே வாரத்தில் உங்களை சம்மணமிட்டு அமர வைப்போம்’’ என்ற விளம்பரம் வெளியிடுமோ என்று எனக்கு ஒரு பயம் இருக்கிறது.

தொந்தி குறைய வழிகள்.


நடை பயிற்சி

உணவு கட்டுப்பாடு

யோகா

இவை தவிர வேறு மார்க்கம் இல்லை.


Tuesday 20 March 2012

நானும் ஹோமியோபதியும்


தனிமை


 ஊர்ந்து போன நிலவு போல் காலம் உறைந்து கிடக்கிறது
ஏதுமற்ற பொழுதுகளில் சிலையாய் நிற்கிறேன்.
வீடுண்டு
வாசலுண்டு,
முகமில்லை ,
பேசுதலில்லை

பிரியங்களின் சுவடில்லை 
அன்பின் கண்ணீரோ, பிரியத்தின் கோபமோ ஏதுமில்லை

மீளமுடியாத புதைகுழியாய் காலம் அழுத்துகிறது
எல்லை மீறிப்போனபின்னும் ஏன் இன்னும்
சீவனம் தேடி துடித்திருக்கிறது உடல்

துரோகத்தின் வடுக்கள்
ஏமாளியின் இயலாமை
சிறுவாடு சேர்க்கும் கண்ணீர் துளிகள்
கேவலங்களினூடே பயணப்பட்ட கால்கள்
காத்திருக்கின்றன நம்பிக்கைகளை சுமந்தபடி
ஒரு
அர்ப்பணிப்பின் தாங்குதலுக்காக......                                      
                                                                                                      கோவிந்தராஜு

Saturday 10 March 2012

இன்று காலை ''பசுமை விகடன்'' படித்தேன் அதில் திரு நம்மாழ்வார் எழுதிய சுய வரலாறு கட்டுரையில் அவர் நண்பர் சொன்ன வார்த்தைகளை இங்கே கொடுக்கிறேன்-                                                                                                      yielding to injustice and misuse of  power are nothing but moral prostitution------                                                                                                                   நாம் வாழும் காலம் எவ்வளவு மோசமான மனிதர்களை சுமந்து வருகிறது நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.  ''அநீதிக்கு வீட்டுக் கொடுப்பதும் , அதிகார்த்தை தவறாக பயன் படுத்துவதும் ,ம்னதளவில் விபசசாரம் செய்வதை தவிர வேறில்லை