Tuesday 24 April 2012


10 வருட போராட்டம்.







Dr கைலாசம் ஒரு sms அனுப்பி இருந்தார். அதில் முதல் வரியே ’’ ஆத்தா  நா பாசாயிட்டேன் ’’ என்பதுதான். பழைய தமிழ் சினிமாக்களில் பரிட்சையில் பாசான கதாநாயகனோ , கதாநாயகியோ இப்படித்தான் கூவிக்கொண்டே ஒடி வருவார்கள்.



இந்த கூவல் சாதரணமானது அல்ல, 10 வருட தீவிரம் முழுமையடைந்ததன் பின்னணி வலி நிறைந்த இந்த பாதை முழுமையும், எதிர் கொண்ட மனிதர்களையும், உதவிக்கு நீண்ட கரங்களையும் கீழுதடு கடித்து நக்கலடித்த முகங்களையும், மறந்து விட முடியாது.













தமிழ்நாடு ஹோமியோபதி காலேஜில் முதலாமாண்டு வரை படித்து ,தேர்வின் போது +2 தேவை என அறிவித்தது நிர்வாகம்[இவர் அந்தகால பியூசி ] பின்னர் வெளியேறி national institute of open school ல் படித்து பின்னர் விநாயகா மிஷனில்  ஹோமியோபதி படித்து வெளியே வந்திருப்பது எளிமையான விசயம் அல்ல.

படிப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல ஆனால்  சமுகம் உருவாக்கி வைத்திருக்கும்  தடைகள் ஏராளம். அதை தாண்டுவதும் , தாண்டி ஜெயித்திருப்பதும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம்       

   dr கைலாசம் வீட்டுக்கதவுகள் தீவிரமான ஹோமியோபதியர்காகவும், ஆன்மிக வாதிகளுககாவும் எப்போதும் திறந்திருக்கிறது.

அங்கே நடக்கும் விவாத பரிவர்த்தனைகளில் எதிர்பார்த்த விசயங்களை தாண்டி மாணிக்கங்களையும், முத்துக்களையும் பொருக்கிக்கொள்ள முடியும்.


















ஒரு முறை அவர் அப்பாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்

. ’’ இவர் கோவிந்து , என்ன மாதிரியே இப்பத்தான் +2 படிக்கிறார்.’’

அப்பா ஆழமான ஒரு பார்வை பார்த்தார். லேசான சிரிப்பு சுழித்தோடி நின்றது உதட்டில்

உன்னோட இருக்கிற ஆட்கள் உன்ன மாதிரிதான? என்பதான அர்த்தம் எனக்குள் ஓடியது.

அப்போது அவர் மிக அழகான தேர் ஒன்றை செய்து கொண்டிருந்தார். இன்னும் அந்த தேரை பார்க்கும் போதெல்லாம், அந்த சிரிப்பை மறக்க முடிவதில்லை.

இந்த தீவிர செயல்பாட்டுக்குப் பின்னால் அவரின் மொத்த குடும்பமும் பங்காற்றி இருக்கிறது.

விருதுநகரா , மதுரையா , பெங்களூரா , சேலமா , எல்லா இடங்களுக்கும் குடும்பம் அவரோடு பயணப்பட்டது. தொழிற்சங்க வேலையாக இருக்கட்டும், அல்லது ஹோமியோபதியர்களின் விவாதமோ , ஆன்மீகத்தின் சத்சங்கமோ , எல்லா நிலைகளிலும் குடும்பம் துணைநின்றது.




உண்மையில் எதை இந்த உலகம் கேட்கிறதோ , அதை செய்து முடித்து விட்டார்கள்,
அதை தாண்டி இந்த மக்கள் கூட்டம் எப்படி பயணடையபோகிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் 

Tuesday 17 April 2012


துவரம் பருப்பு,
கடலை பருப்பு,
அன்னாஹசாரே...................................








எங்கள்  கல்லூரியின் முதலாமாண்டு தேர்வுகள் முடிந்த பின் சக மாணவர்களுக்கு  என் வீட்டில் ஒரு எளிய விருந்து கொடுத்தேன் . எல்லோரும் வீடு போய் சேரும் முன் இயல்பாய் கலந்து பேசுவதற்கு வாய்ப்பாய் அமைந்தது.













அப்போது விளையாட்டாய் ஒரு போட்டி வைத்தேன். கடலை பருப்பு டப்பாவையும், துவரம் பருப்பு டப்பாவையும், கையில் கொடுத்து  எது து.பருப்பு எது  க.பருப்பு கண்டுபிடியுங்கள் என்று சொன்னேன்.

பெரும் பாலான ஆம்பிளை பசங்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.  பெண்பிள்ளைகள் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள் . அது மட்டுமல்ல கண்டு கொள்ள முடியாமைக்காக பெருமிதமும் அடைந்தார்கள்.

’’எங்க வீட்ல நாந்தான் செல்லம் ’’

’’நா சமையல் கட்டுப்பக்கமே போனது இல்ல ’’

’’எங்க அப்பா சோறு உட்டினாத்தான் நான் சாப்பிடுவேன்.’’

’’நான் நல்லா வெந்நீர் போடுவேனே ’’

இது போன்ற கருத்து பிழிவுகள் வந்து விழுந்தன,

ஒன்பதாம் வகுப்பு தொடக்கம் பனிரெண்டாம் வகுப்பு வரை பிள்ளைகளை மார்க்குகளை மேயும் மாடுகள் மாதிரி வளர்க்கிறோம்.

உலகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது இப்போதைய நாகரீகம், படிக்கும் பிள்ளைகள் சமுகம் பற்றியோ. சக மனிதனைப்பற்றியோ சிந்திப்பது இல்லை. 

தனது ambition பற்றி மட்டுமே கவலை படுகிறார்கள்.  பாடம் தவிர்த்து மற்ற விசயங்களை படிப்பதே இல்லை.  --- இந்தி எதிர்ப்பில் துள்ளிக்குதித்த தமிழகம் எங்கே போனது ?

என் சக தோழியும் மாணவியுமான செல்வி s அவர்களோடு தொலைபேசியில் பேசும் போது அன்னா ஹாசாரே பற்றி கேட்டேன்,   அவள் திருப்பி கேட்கிறாள்.’’அப்பிடினா என்ன சார்

’’ . நான் அதிர்ந்துபோனேன்.

’’ஏம்புள்ள உண்மையிலேயே உனக்கு தெரியாதா ’’

’’ சத்தீமா தெரியாது சார் ’’

நான்  அழுவாதா ?  சிரிப்பதா ?

’’ சரி ஒரு வாரம் டைம் தர்ரேன் அதுக்குள்ள அன்ன ஹசாரே அப்பிடீன்னா என்னனு கண்டுபிடிக்க வேனும் சரியா ? . இது உனக்கு ஒரு அசைன்மெண்ட் ’’ என்றேன்.

ஒரு வாரம், பத்துநாள் ஆனது. ஒரு நாள் அவளை இடை மறித்துக்கேட்டேன்.

’’கண்டுபிடிச்சியா !’’

அவள் கமுக்கமாக சிரித்துக்கொண்டே சொன்னாள்’’ இல்ல சார் ’’

கடைசி வரைக்கும் அவள் கண்டுபிடிக்கவே இல்லை.
அதற்காக அவள் வருந்தவும் இல்லை.                                                                                     

இவளுக்கு நேர் எதிர், செல்வி b3 நிறைய படிப்பாள். அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்வாள். பத்திரிக்கை நிருபர் ஆக வேண்டும் , புகைபடம் எடுக்க வேண்டும் என்று ஆவலாய் இருப்பாள். உதவி செய்ய நீளும் கரங்கள் இவளுடையது.
இவ்வருட தேர்வு முடிவில் செல்வி s வெற்றி பெற்று விட்டாள். செல்வி b3யும், இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தோல்வி அடைந்து விட்டோம்.
வாழ்வு எழுதிச் செல்லும்  புதிர் விளையாட்டை களைப்படையாமல் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.


Saturday 7 April 2012


புதிய ஹோமியோபதி புத்தகங்கள்
Dr v s சுப்பிரமணி அவர்கள் மொழிபெயர்த்த , பதிப்பித்த , நான்கு ஹோமியோபதி புத்தகங்கள் இந்த மாதத்தில் வெளிவந்து விட்டது.  




















விஜயா பதிப்பகம் வெளியிட்ட இந்த நான்கு புத்தகங்களும் தமிழில் பதிப்பிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் கழிந்து விட்டது.

மறு பதிப்பு இப்போதுதான் வெளி வருகிறது.

கிடைப்பதற்கு அரிய இப்புத்தகங்களை தமிழ் மக்கள் எவ்விதம் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதை நான் ஆவலுடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழர்களுக்கு என்று ஒரு பொதுப்புத்தி உண்டு.

 



















இங்கே மோர் விற்க வேண்டுமானால் ‘’மோர் மோரெ’’ என்று கூவவேண்டும், ஆனால் கள் விற்க வேண்டுமானால் , சத்தம் இல்லாமல் விற்று விடலாம்.

 இந்த பொதுபுத்தியை தாண்டி இந்த புத்தகங்கள் விற்கவேண்டும் என்பதே என் எதிர் பார்ப்பு.