துவரம் பருப்பு,
கடலை பருப்பு,
அன்னாஹசாரே...................................
எங்கள் கல்லூரியின் முதலாமாண்டு தேர்வுகள் முடிந்த பின் சக மாணவர்களுக்கு என் வீட்டில் ஒரு எளிய விருந்து கொடுத்தேன் . எல்லோரும் வீடு போய் சேரும் முன் இயல்பாய் கலந்து பேசுவதற்கு வாய்ப்பாய் அமைந்தது.
அப்போது விளையாட்டாய் ஒரு போட்டி வைத்தேன். கடலை பருப்பு டப்பாவையும், துவரம் பருப்பு டப்பாவையும், கையில் கொடுத்து எது து.பருப்பு எது க.பருப்பு கண்டுபிடியுங்கள் என்று சொன்னேன்.
பெரும் பாலான ஆம்பிளை பசங்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.
பெண்பிள்ளைகள் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்
. அது மட்டுமல்ல கண்டு கொள்ள முடியாமைக்காக பெருமிதமும் அடைந்தார்கள்.
’’எங்க வீட்ல நாந்தான் செல்லம் ’’
’’நா சமையல் கட்டுப்பக்கமே போனது இல்ல ’’
’’எங்க அப்பா சோறு உட்டினாத்தான் நான் சாப்பிடுவேன்.’’
’’நான் நல்லா வெந்நீர் போடுவேனே ’’
இது போன்ற கருத்து பிழிவுகள் வந்து விழுந்தன,

உலகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது இப்போதைய
நாகரீகம், படிக்கும் பிள்ளைகள் சமுகம் பற்றியோ. சக மனிதனைப்பற்றியோ சிந்திப்பது இல்லை.
தனது ambition பற்றி மட்டுமே கவலை படுகிறார்கள்.
பாடம் தவிர்த்து மற்ற விசயங்களை படிப்பதே இல்லை. --- இந்தி எதிர்ப்பில் துள்ளிக்குதித்த தமிழகம்
எங்கே போனது ?
என் சக தோழியும் மாணவியுமான செல்வி s அவர்களோடு தொலைபேசியில்
பேசும் போது அன்னா ஹாசாரே பற்றி கேட்டேன், அவள் திருப்பி கேட்கிறாள்.’’அப்பிடினா என்ன சார்
’’ . நான் அதிர்ந்துபோனேன்.
’’ஏம்புள்ள உண்மையிலேயே உனக்கு தெரியாதா ’’
’’ சத்தீமா தெரியாது சார் ’’
நான் அழுவாதா
? சிரிப்பதா ?

ஒரு வாரம், பத்துநாள் ஆனது. ஒரு நாள் அவளை இடை மறித்துக்கேட்டேன்.
’’கண்டுபிடிச்சியா !’’
அவள் கமுக்கமாக சிரித்துக்கொண்டே சொன்னாள்’’ இல்ல சார் ’’
கடைசி வரைக்கும் அவள் கண்டுபிடிக்கவே இல்லை.
அதற்காக அவள் வருந்தவும் இல்லை.
இவளுக்கு நேர் எதிர், செல்வி b3 நிறைய படிப்பாள். அனாதை குழந்தைகளுக்கு
உதவி செய்வாள். பத்திரிக்கை நிருபர் ஆக வேண்டும் , புகைபடம் எடுக்க வேண்டும் என்று
ஆவலாய் இருப்பாள். உதவி செய்ய நீளும் கரங்கள் இவளுடையது.
இவ்வருட தேர்வு முடிவில் செல்வி s வெற்றி பெற்று விட்டாள்.
செல்வி b3யும், இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தோல்வி அடைந்து விட்டோம்.
வாழ்வு எழுதிச் செல்லும் புதிர் விளையாட்டை களைப்படையாமல் ரசித்துக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment