Tuesday, 24 April 2012


10 வருட போராட்டம்.







Dr கைலாசம் ஒரு sms அனுப்பி இருந்தார். அதில் முதல் வரியே ’’ ஆத்தா  நா பாசாயிட்டேன் ’’ என்பதுதான். பழைய தமிழ் சினிமாக்களில் பரிட்சையில் பாசான கதாநாயகனோ , கதாநாயகியோ இப்படித்தான் கூவிக்கொண்டே ஒடி வருவார்கள்.



இந்த கூவல் சாதரணமானது அல்ல, 10 வருட தீவிரம் முழுமையடைந்ததன் பின்னணி வலி நிறைந்த இந்த பாதை முழுமையும், எதிர் கொண்ட மனிதர்களையும், உதவிக்கு நீண்ட கரங்களையும் கீழுதடு கடித்து நக்கலடித்த முகங்களையும், மறந்து விட முடியாது.













தமிழ்நாடு ஹோமியோபதி காலேஜில் முதலாமாண்டு வரை படித்து ,தேர்வின் போது +2 தேவை என அறிவித்தது நிர்வாகம்[இவர் அந்தகால பியூசி ] பின்னர் வெளியேறி national institute of open school ல் படித்து பின்னர் விநாயகா மிஷனில்  ஹோமியோபதி படித்து வெளியே வந்திருப்பது எளிமையான விசயம் அல்ல.

படிப்பதற்கு வயது ஒரு தடையே அல்ல ஆனால்  சமுகம் உருவாக்கி வைத்திருக்கும்  தடைகள் ஏராளம். அதை தாண்டுவதும் , தாண்டி ஜெயித்திருப்பதும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம்       

   dr கைலாசம் வீட்டுக்கதவுகள் தீவிரமான ஹோமியோபதியர்காகவும், ஆன்மிக வாதிகளுககாவும் எப்போதும் திறந்திருக்கிறது.

அங்கே நடக்கும் விவாத பரிவர்த்தனைகளில் எதிர்பார்த்த விசயங்களை தாண்டி மாணிக்கங்களையும், முத்துக்களையும் பொருக்கிக்கொள்ள முடியும்.


















ஒரு முறை அவர் அப்பாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்

. ’’ இவர் கோவிந்து , என்ன மாதிரியே இப்பத்தான் +2 படிக்கிறார்.’’

அப்பா ஆழமான ஒரு பார்வை பார்த்தார். லேசான சிரிப்பு சுழித்தோடி நின்றது உதட்டில்

உன்னோட இருக்கிற ஆட்கள் உன்ன மாதிரிதான? என்பதான அர்த்தம் எனக்குள் ஓடியது.

அப்போது அவர் மிக அழகான தேர் ஒன்றை செய்து கொண்டிருந்தார். இன்னும் அந்த தேரை பார்க்கும் போதெல்லாம், அந்த சிரிப்பை மறக்க முடிவதில்லை.

இந்த தீவிர செயல்பாட்டுக்குப் பின்னால் அவரின் மொத்த குடும்பமும் பங்காற்றி இருக்கிறது.

விருதுநகரா , மதுரையா , பெங்களூரா , சேலமா , எல்லா இடங்களுக்கும் குடும்பம் அவரோடு பயணப்பட்டது. தொழிற்சங்க வேலையாக இருக்கட்டும், அல்லது ஹோமியோபதியர்களின் விவாதமோ , ஆன்மீகத்தின் சத்சங்கமோ , எல்லா நிலைகளிலும் குடும்பம் துணைநின்றது.




உண்மையில் எதை இந்த உலகம் கேட்கிறதோ , அதை செய்து முடித்து விட்டார்கள்,
அதை தாண்டி இந்த மக்கள் கூட்டம் எப்படி பயணடையபோகிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment